இடிக்கப்பட்ட பள்ளி கட்டிடம்..! பூட்டை உடைத்து உபகரணங்கள், சான்றிதழ்களை தூக்கி சென்ற கான்ட்ராக்ட்டர்... தனி நபரின் வீட்டில் மாணவர்கள் தேர்வு எழுதும் அவலம்

x

திருவண்ணாமலை அருகே தலைமை ஆசிரியர் அனுமதியின்றி பள்ளி உபகரணங்கள், சான்றிதழ்கள் உள்ளிட்டவற்றை, அரசு ஒப்பந்ததாரர் எடுத்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம், அண்டபேட்டை கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில், 20 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த கிராமத்தில், 28 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் புதிய தொடக்கப்பள்ளி கட்டடம் கட்டுவதற்கு ஒப்பந்தம் விடப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், புதிய பள்ளி கட்டடம் கட்டுவதற்கு ஒப்பந்தம் பெற்ற அரசு ஒப்பந்ததாரர், தலைமை ஆசிரியரின் அனுமதியின்றி பள்ளியின் பூட்டை உடைத்து, பொருள்கள் மற்றும் மாணவர்கள் சான்றிதழ்களை எடுத்துச் சென்றுவிட்டு, பள்ளி கட்டடத்தை இடிக்கும் பணிகளை தொடங்கியுள்ளார். இதனால், மாணவர்கள் தனி நபரின் வீட்டில் ஆண்டு இறுதித் தேர்வை எழுதி வருகின்றனர். எடுத்துச் சென்ற பொருள்களை உடனடியாக கொடுக்காவிட்டால், போலீசாரிடம் புகாரளிக்கப்படும் என தலைமை ஆசிரியர் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்