பத்தே நிமிடத்தில் சுவையான கேக்... சர்வதேச சமையல் - Banana choclate cake..
சர்வதேச சமையல்ல... நாம இன்னைக்கு சமைக்க போற ரெசிபி... கொரியாவுல ரொம்பவே ஃபேமஸ்ஸா இருக்குற Banana choclate cake...
அதாவது நம்ம ஊர்ல பேக்கரிக்கு போனா BLACK FOREST... WHITE FOREST-ன்னு வாங்கி சாப்டுவோம்ல... அதே மாதிரி கொரியா மக்கள் எல்லாரும் தேடி பிடிச்சு ரசிச்சு சாப்புடுற கேக் தான்... இந்த Banana choclate cake
கேக்கா... கேக் செய்யறதுக்கு அவன்லாம் வேணுமேனு நீங்க யோசிக்கிறது எனக்கும் கேக்குது.... ஆனா அந்த தயக்கம்லாம் தேவையில்லைங்க... ஏனா நம்ம வீட்டுல இருக்க நார்மல் பாத்திரத்துலயே பண்ணலாங்குறது தான்... இந்த ரெசிபியோட ஸ்பெஷ்லே...
சரி... சரி... ரொம்ப நேரம் பேசியே உங்கள போறடிக்க விரும்பல... அதுனால சட்டுபுட்டுனு ரெசிபிய சமைக்க ஆரம்பிக்கலாம் வாங்க...
Banana choclate cake சமைக்க தேவையான பொருட்கள்... வாழைப்பழம், முட்டை, மைதா, கோக்கோ பவுடர், பேக்கிங் பவுடர், வினிகர், சக்கரை, வெண்ணிலா சுகர், உப்பு , குக்கிங் ஆயில், பால் அவ்ளோதான்... இனி சமையலை ஸ்ட்டார்ட் பண்ணிடலாம்...
முதல்ல ஒரு மூனு வாழப்பழத்தை எடுத்து... இரண்டா வகுந்து எடுத்து வச்சிக்கோங்க... அடுத்து ஒரு பெரிய சைஸ் பேன்ல... 1 ஸ்பூன் பட்டர்ர போட்டு நல்லா மனக்க மனக்க உருக விடனும்... அது மேல ஒரு ஸ்பூன் சக்கரைய தூவி விட்டு சர்க்கரை, பாகு பதத்துக்கு வர வரை கிளரி விடனும்...
பாகு ரெடியானதும்... நறுக்கி வச்ச வாழைபழத்தை அது மேல வரிசை கட்டி அடுக்கி தனியா எடுத்து வைங்க...
சமையலின் அடுத்தகட்டமா... வேற ஒரு பாத்திரத்துல ஒரு முட்டைய உடைச்சு ஊத்தி... அதுல கால் ஸ்பூன் உப்பு, கால் கப் சர்க்கரை, 8 கிராம் வெண்ணிலா சுகர் இது எல்லாத்தையும் சரியான அளவுள போட்டு நல்லா மிக்ஸ் பண்ணிக்கனும்... ஏன் நல்லா மிக்ஸ் பண்ண சொல்லுறேன்னா அப்போ தான்... கேக் புஸ்ஸுனு வரும்...
மிக்ஸ் பண்ணி முடிச்சதும் ரெசிபிக்கு கூடுதல் டேஸ்ட் குடுக்க கால் கப் வெஜிடபில் ஆயில்... அரை கப் பால ஊத்தி மறுபடியும் நல்லா கலக்கி விடனும்...
அடுத்து இந்த பாத்திரத்து மேல ஒரு வடிகட்டிய வச்சு... அதுல ஒரு கப் மைதா மாவு, 3 ஸ்பூன் கோக்கோ பவுடர், 8 கிராம் பேக்கிங் பவுடர்னு எல்லாத்தையும் சரியான அளவுள போட்டு... அழகா மழை சாரல் போல சளிச்சு விட்டு... மறுபடியும் மிக்ஸ் பண்ணிக்கனும்... இப்போ மாவு நல்லா சாக்லேட் க்ரீம் பதத்துக்கு வந்ததும்... ஒரு ஸ்பூன் வினிகர ஊத்தி மறுபடியும் கலந்து விடனும்...
சமையலின் கடைசி கட்டமா... மொத்த மாவையும் அடுக்கி வச்ச வாழை பழத்து மேல ஊத்தி.... ஃபில் பண்ணனும்...
அதை ஒரு 20 நிமிஷம் சிம்ல கொதிக்க விட்டு எடுத்தா... கொரியாவின் டேஸ்ட்டி BANANA CHOCLATE CAKE ரெடி...