"ஏர்போர்ட்டில் பயணிகளை பூட்டி வைத்த அதிகாரிகள்..." - "எல்லாத்துக்கும் ஸ்பைஸ்ஜெட் தான் காரணம்" வெளியான பரபரப்பு வீடியோ
டெல்லி விமான நிலையத்தில் போர்டிங் கேட் மற்றும் விமானம் இடையே அதிகாரிகள் தன்னை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பூட்டி வைத்ததாக குற்றம்சாட்டி இன்ஸ்டாகிராமில் ஒருவர் வீடியோ வெளியிட்டுள்ளார். டெல்லியிலிருந்து பெங்களூர் செல்லவிருந்த ஸ்பைஸ்ஜெட் விமானம் தாமதமான நிலையில், எப்போதாவது விமானம் தாமதமானால், அதை தான் புரிந்துகொள்வேன் என்றும், ஆனால், பயணிகளை போர்டிங் கேட்டை கடக்க வைத்து, பிறகு விமானத்தின் கதவுகளை மூடுவது நல்லதல்ல என்று சௌமில் அகர்வால் என்ற நபர் வீடியோவை பகிர்ந்துள்ளார்.
Next Story