நாக்பூர் - மும்பை சென்ற சரக்கு ரயில் 90 கண்டெய்னர் பெட்டிகளுடன் மாயமா ? மத்திய ரயில்வே விளக்கம்

x
  • 90 கண்டெய்னர் பெட்டிகளுடன் சரக்கு ரயில் மாயமானதாக தகவல் வெளியான நிலையில், அதற்கு மத்திய ரயில்வே மறுப்பு தெரிவித்துள்ளது.
  • நாக்பூரில் இருந்து மும்பை நோக்கி கடந்த ஒன்றாம் தேதி, 90 கண்டெய்னர் பெட்டிகளுடன் சரக்கு ரயில் புறப்பட்டது.
  • ஆனால் 14 நாட்களாகியும் மும்பைக்கு செல்லவில்லை என்றும், ரயில் மாயமாகிவிட்டதாகவும் சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது.
  • இந்த தகவல் அனைத்தும் உண்மை அல்ல, தவறானது என மத்திய ரயில்வே விளக்கம் அளித்துள்ளது. மிகான் கன்டெய்னர் டிப்போவில் இருந்து ஒன்றாம் தேதி புறப்பட்ட ரயில், ஐந்தாம் தேதி ஷேகான் நகரை அடைந்த‌தாக கூறப்பட்டுள்ளது.
  • நவி மும்பையில் உள்ள ஜவகர்லால் நேரு துறைமுகத்தை நோக்கி சரக்கு ரயில் சென்று கொண்டிருப்பதாகவும், தவறான தகவல் வெளியானது குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளதாகவும் மத்திய ரயில்வே தெரிவத்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்