'Spaக்கு ரூ,1000.. பாலியல் உறவுக்கு ரூ.2000'...வாடிக்கையாளர் போல் சென்ற போலீஸ்க்கு அதிர்ச்சி -கிடைத்த ரகசிய தகவல்... சிக்கிய இருவர்
- டெல்லியில், ஸ்பா என்ற பெயரில், பாலியல் தொழில் நடத்தி வந்த இருவரை போலீசார் கைது செய்தனர்.
- டெல்லி நிர்மான் விஹார் பகுதியில் உள்ள ஒரு மாலில், ஸ்பா என்ற பெயரில் பாலியல் தொழில் நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
- அதனைக் கண்டறிய போலீசார் ஒருவர், வாடிக்கையாளர் போல் அந்த ஸ்பாவிற்கு சென்றுள்ளார்.
- ஸ்பாவில் பணியாற்றும் ஊழியர்கள், அங்கே பணிபுரியும் 9 பெண்களில் ஒருவரை தேர்வு செய்யுமாறு வாடிக்கையாளரிடம் கேட்டுள்ளனர்.
- மேலும், ஸ்பா மட்டும் செய்து கொண்டால் ஆயிரம் ரூபாய் என்றும், பாலியல் உறவுக்கு 2 ஆயிரம் ரூபாய் எனவும், மொத்தமாக 3 ஆயிரம் ரூபாய் கேட்டுள்ளனர்.
- பாலியல் தொழில் நடைபெறுவது உறுதியானதை அடுத்து, தகவலின் பேரில் வந்த போலீசார், 2 பேரை கைது செய்தனர்.
- பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில், கைதான இருவரும், ராம் சாகர், தீபக் என தெரியவந்தது.
- இந்த ஸ்பா கடந்த இரண்டு ஆண்டுகளாக அதே பகுதியில் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
Next Story