"ஓம் - அல்லா இரண்டும் ஒன்று தான்" முஸ்லிம் அமைப்பின் தலைவர் சர்ச்சை கருத்து பிற மதத் தலைவர்கள் கடும் எதிர்ப்பு
- இந்து மதத்தில் உள்ள 'ஓம்' என்ற மந்திரம் குறித்து முஸ்லிம் தலைவர் பேசிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
- ஜமியத் உலமா ஐ ஹிந்த் அமைப்பின் மாநாடு டெல்லியில் நடைபெற்றது.
- ராம் லீலா மைதானத்தில் நடைபெற்ற இந்த மாநாட்டில் இந்து, ஜெயின், கிறிஸ்தவ மற்றும் சீக்கிய மத தலைவர்கள் பங்கேற்றிருந்தனர்.
- அப்போது பேசிய முஸ்லிம் மத தலைவரான மவுலானா அர்ஷத் மதனி என்பவர், 'ஓம்' எனும் இந்து மத வார்த்தையும் அல்லாவும் ஒன்றுதான் என கூறினார். '
- ஓம்' வார்த்தைக்கு நிறம், உருவம் இல்லை என்றும் காற்றைப் போலவே, எல்லா இடங்களிலும் உள்ளது என கூறிய அவர், இதனையே அல்லா என அழைப்பதாகவும் கூறினார்.
- அவரது இந்த கருத்துக்கு, பிற மத தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததோடு, மேடையில் இருந்தும் கீழே இறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
- மதங்கள் மற்றும் சமூகங்களுக்கு இடையிலான பிளவுகளைக் குறைத்து ஒற்றுமையை அதிகரிப்பதற்காகவே இந்த கூட்டத்தில் பங்கேற்றதாக மற்ற மத தலைவர்கள் தெரிவித்தனர்.
Next Story