திடீரென மேடையிலேயே கண்கலங்கி அழுத டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் | Aravind kejriwal

x

டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், சிறையில் இருக்கும் முன்னாள் அமைச்சர் மணீஷ் சிசோடியாவை நினைத்து கண் கலங்கினார்.

டெல்லி பவானா பகுதியில் உள்ள தரியாபூர் கிராமத்தில் சிறப்பு சிறப்புப் பள்ளியை திறந்து வைத்து பேசிய கெஜ்ரிவால், திடீரென்று உணர்ச்சி வசப்பட்டு கண்கலங்கி நின்றார். மணீஷ் சிசோடியாவைக் குறிப்பிட்டு, இந்த பள்ளியை திறப்பதே அவருடைய கனவாக இருந்தது என்று கூறினார். டெல்லியில் தொடங்கியிருக்கும் கல்விப் புரட்சியை பாஜக நிறுத்த விரும்புவதாக கூறிய அவர், மணீஷ் சிசோடியா தொடங்கிய இந்த திட்டதை நிறுத்த விடமாட்டோம் என்றும் கூறினார். அனைத்து குழந்தைகளும் நல்ல கல்வியைப் பெற வேண்டும் என்று விரும்பிய நல்ல மனிதரை பாஜக அரசு சிறையில் அடைத்துள்ளது என்றும், கல்வி முறையை மேம்படுத்தாமல் இருந்திருந்தால், அவர் இன்று சிறையில் இருந்திருக்க மாட்டார் என்றும் கெஜ்ரிவால் உருக்கமாக பேசினார்.


Next Story

மேலும் செய்திகள்