நாட்டை உலுக்கிய டெல்லி சம்பவம் - கார் விபத்தில் கைதானவருக்கு.. நீதிமன்றம் உத்தரவு

x

நாட்டை உலுக்கிய டெல்லி சம்பவம் - கார் விபத்தில் கைதானவருக்கு.. நீதிமன்றம் உத்தரவு


நாட்டையே உலுக்கிய இளம்பெண்ணை 13 கிலோ மீட்டர் இழுத்து சென்ற கார் விபத்தில், கைதானவருக்கு ஜாமின் வழங்கி டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


டெல்லியின் கஞ்சவாலா பகுதியில் அஞ்சலி என்ற இளம்பெண் சென்ற இருசக்கர வாகனம் விபத்திற்குள்ளானது. காரின் முன்பக்க சக்கரத்தில் சிக்கி கொண்ட அஞ்சலியை, 13 கிலோ மீட்டர் தூரத்திற்கு கார் இழுத்து சென்றுள்ளது. உடல் சிதைந்து அஞ்சலி உயிரிழந்த சம்பவத்தில், காரில் இருந்த 5 பேரும், அவர்களுக்கு உதவிய கார் ஓட்டுநர் உட்பட 2 பேரும் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் நேற்று முன் தினம் குற்றவாளிகளுக்கு உதவியதாக கைதான அங்குஷ் என்பவருக்கு ஜாமின் வழங்கி டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்