சமூக வலைதளங்களில் அவதூறு - அதிமுக நிர்வாகி மீது பாய்ந்தது வழக்கு
திருச்சி துவாக்குடி அருகே மத ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்த அதிமுக நிர்வாகி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். துவாக்குடியை சேர்ந்த செந்தில் குமார் என்பவர், அதிமுக தொழில்நுட்ப பிரிவு நிர்வாகியாக உள்ளார். இவர், இரு மதத்தினர் இடையே மோதலை உருவாக்கும் வகையில் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்ததாக தெரிகிறது. இதுகுறித்து திமுக நிர்வாகி அளித்த புகாரின் அடிப்படையில், செந்தில் குமார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story