சென்னை ஏரிகளில் நீர் மட்டம் சரிவு
கடும் வெப்பத்தினால்,சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர்மட்டம் வெகுவாக சரிந்துள்ளது. இதன் பின்னணி பற்றி இந்தத் தொகுப்பு அலசுகிறது.
சென்னைக்கு குடிநீர் வழங்கும் 6 ஏரிகளின் மொத்த கொள்ளளவு 13.2 டி.எம்.சி ஆக உள்ளது.
கடும் வெய்யில் காரணமாக, இவற்றில் உள்ள நீரின் மொத்த அளவு, மே 14இல் 7.7 டி.எம்.சியாக இருந்து, தற்போது 7.55 டி.எம்.சியாக சரிந்துள்ளது.
364 கோடி கன அடி கொள்ளளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில் உள்ள நீரின் அளவு, மே 14இல் 256 கோடி கன அடியாக இருந்து,
தற்போது 250 கோடி கன அடியாக குறைந்துவிட்டது.
108 கோடி கன அடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில் உள்ள நீரின் அளவு, மே 14இல் 74.6 கோடி கன அடியாக இருந்து, தற்போது 73.6 கோடி கன அடியாக குறைந்துவிட்டது.
330 கோடி கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் உள்ள நீரின் அளவு, மே 14இல் 246 கோடி கன அடியாக இருந்து, தற்போது 240 கோடி கன அடியாக குறைந்துவிட்டது.
50 கோடி கன அடி கொள்ளளவு கொண்ட கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரியில் உள்ள நீரின் அளவு, மே 14இல் 46.6
கோடி கன அடியாக இருந்து, தற்போது 46.4 கோடி கன அடியாக குறைந்துவிட்டது.
146 கோடி கன அடி கொள்ளளவு கொண்ட வீராணம் ஏரியில் உள்ள நீரின் அளவு, மே 14இல் 43.3 கோடி கன அடியாக இருந்து, தற்போது 40 கோடி கன அடியாக குறைந்துவிட்டது.
323 கோடி கன அடி கொள்ளளவு கொண்ட பூண்டி ஏரியில் உள்ள நீரின் அளவு, மே 14இல் 101 கோடி கன அடியாக இருந்து, கிருஷ்ணா நதி நீர் வருகையால் தற்போது 104 கோடி கன அடியாக அதிகரித்துள்ளது.
தற்போது, சென்னை நகரில், தினமும் 104.3 கோடி லிட்டர் குடிநீர் விநியோகிக்கப்படுவதாக சென்னை குடிநீர் வழங்கல் வாரிய அதிகாரிகள் கூறுகின்றனர்.
அக்டோபர் மாதம் வரை சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு இல்லை என்று கூறியுள்ளனர்.