"காசியில் மகாகவி பாரதி வாழ்ந்த வீடு புதுப்பிக்கப்படும் " வாரணாசி கலெக்டர் தகவல்
உத்தரப் பிரதேச மாநிலம், காசியில் மகாகவி பாரதியார்4 ஆண்டுகள் வாழ்ந்த வீட்டை புதுப்பிக்க முடிவு செய்திருப்பதாக வாரணாசி மாவட்ட ஆட்சியர் எஸ்.ராஜலிங்கம் தெரிவித்துள்ளார்.
மகாகவி பாரதியார், வாரணாசியில் உள்ள தனது அத்தை வீட்டில் கடந்த 1898-ஆம் ஆண்டு முதல் 1902-ஆம் ஆண்டு வரை வசித்தார். சிவமடம் என்று பெயரிடப்பட்ட அந்த வீட்டில் தங்கியிருந்தபோது, அவர் சரியாக பள்ளிக்குச் செல்லவில்லை என்றபோதிலும், இந்தி, சமஸ்கிருதம் ஆகிய மொழிகளை கற்றுத் தேர்ந்தார். காசியில் வாழ்ந்த காலத்தில் மதன் மோகன் மாளவியா, அன்னிபெசன்ட் அம்மையார், பாலகங்காதர திலகர் போன்ற முக்கிய அரசியல் ஆளுமைகளைச் சந்தித்து பல்வேறு தெளிவுகளைப் பெற்றார். பாரதியார் 4 ஆண்டுகள் வாழ்ந்த வீட்டில், தற்போது அவருடைய வழித்தோன்றல்கள் வசித்து வருகிறார்கள். அவர்களின் அனுமதியைப் பெற்று, அந்த வீட்டை புதுப்பிக்க முடிவு செய்திருப்பதாக வாராணசி மாவட்ட ஆட்சியர் ராஜலிங்கம் கூறியுள்ளார்.
Next Story