முன்னாள் சீன அதிபர் ஜியாங் ஜெமின் மரணம்

x

முன்னாள் சீன அதிபர் ஜியாங் ஜெமின் தனது 96வது வயதில் காலமானார்.

ரத்த புற்றுநோயால் நீண்ட நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்த ஜியாங் ஜெமின் உடல் உறுப்புகள் செயலிழந்து உயிரிழந்தார்.

இந்த தகவலை சீன கம்யூனிஸ்ட் கட்சி கடிதம் வாயிலாக உறுதிப்படுத்தியுள்ளது.

ஜியாங் ஜெமினின் மறைவு கட்சிக்கும், ராணுவத்திற்கும், அனைத்து இன மக்களுக்கும் கணக்கிட முடியாத பேரிழப்பு என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்