பங்குனி உத்திர திருவிழாவிற்கு சென்ற இளைஞர் சடலமாக கிடந்த அதிர்ச்சி சம்பவம் -விழுப்புரத்தில் பயங்கரம்

x

திண்டிவனம் கிடங்கல் பகுதியை சேர்ந்தவர் கோகுல்ராஜ். இவர் கடந்த 3 ஆம் தேதி மயிலத்தில் நடைபெற்ற பங்குனி உத்திர திருவிழாவுக்கு சென்ற நிலையில், அங்கு சடலமாக கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து இளைஞரின் தாய் அளித்த புகாரின் அடிப்படையில், போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில், கொல்லியங்குளம் மேட்டு தெருவை ரமேஷ் என்பவர் திருவிழாவின் போது ஏற்பட்ட தகராறில் கோகுல்ராஜை அடித்து கொன்றது தெரியவந்துள்ளது. இதையடுத்து, ரமஷை கைது செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்