கள்ளக்காதலுக்கு தடை போட்ட மாமனார் மாமியார்... காதலனோடு சேர்ந்து விஷம் வைத்து கொன்ற மருமகள்...
கீதாவுக்கு 15 வருடங்களுக்கு முன்பு வேல்முருகன் என்பவரோடு திருமணம் ஆகியிருக்கிறது. இந்த தம்பதிக்கு அடுத்தடுத்து இரண்டு ஆண் பிள்ளைகள் பிறந்திருக்கிறார்கள் இந்த நிலையில், வேல்முருகன் வேலைக்காக சிங்கபூருக்கு சென்றுவிட குழந்தைகளோடு, மாமனார், மாமியார் வீட்டுல் வசித்து வந்திருக்கிறார் கீதா.சிங்கபூரில் வேலை பார்த்து வந்த வேல்முருகன் தனது ஊரில் புதிதாக வீடு ஒன்றை கட்டி வந்திருக்கிறார். பணம் அனுப்புவது கணவனாக இருந்தாலும், வீடு கட்டும் பொறுப்பு மொத்தமும் கீதாவின் கையில் தான் இருந்திருக்கிறது.. அப்போது புது வீட்டிற்கு டையில்ஸ் போட ஹரிஹரன் என்பவர் வந்திருக்கிறார்.
ஹரிஹரன் கீதாவின் பள்ளிகால நண்பன். இவருவரும் ஏற்னவே நன்கு பழக்கமானவர்கள். புது வீட்டுக்கு டைல்ஸ் ஒட்டி வந்த ஹரிஹரன், கீதாவின் இதயத்தில் காதலையும் சேர்த்தே ஒட்டியிருக்கிறார். இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்திருக்கிறார்கள். ஒரு கட்டத்தில் இந்த விஷயம் மாமியார் கொளஞ்சிக்கு தெரிய வந்திருக்கிறது.கள்ளக்காதலர்கள் இருவரையும் கண்டித்ததோடு, வேல்முருகனுக்கும் தகவல் கொடுத்திருக்கிறார். மனம் நொந்த வேல்முருகன் சிங்கபூரில் இருந்து பறந்து வந்து, மனைவியை கடுமையாக கண்டித்ததோடு உள்ளூரிலேயே தங்கி இருக்கிறார்.
இதனால் கீதா தனது காதலனை சந்திக்க முடியாமல் போயிருக்கிறது. ரகசிய காதலர்களுக்கு மாமனார் மாமியார் மீதிருந்த கோவம் நாளுக்கு நாள் கொலை வெறியாக மாறியிருக்கிறது. இருவரும் சேர்ந்து அவர்களை தீர்த்துக் கட்ட திட்டம் தீட்டி இருக்கிறார்கள். சம்பவத்தன்று ஹரிஹரன் வாங்கிக் கொடுத்த எலி பேஸ்ட்டை, கீதா முள்ளங்கி சாம்பாரில் கலந்திருக்கிறார்.விஷம் கலந்த சாப்பாட்டை சுப்பிரமனியனும், அவரது மனைவி கொளஞ்சியும் பக்கத்து வீட்டு சிறுவனோடு சேர்ந்து சாப்பிட்டிருக்கிறார்கள். சிறிது நேரத்திலேயே மூருவரும் வாந்தி மயக்கத்தோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். அதனை தொடர்ந்து மூவரும் பரிதாபமாக இறந்து போயிருக்கிறார்கள்.மூன்று பேரின் சாவுக்கும் ஃபுட் பாய்சன் தான் காரணம் என அனைவரும் நினைத்ததால், கீதாவும், ஹரிஹரனும் நிம்மதியாக தங்கள் காதல் வாழ்கையை தொடர்ந்திருக்கிறார்கள்.ஆனால் போலீசார் நடத்திய தீவிரவிசாரனையில் தற்போது உணமை வெளியே வந்திருக்கிறது. இதனையடுத்து போலீசார் கீதாவையும் அவரது கள்ளகாதலன் ஹரிஹரனையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.