மாமனாரால் கொடூரமாக வெட்டப்பட்ட மருமகள்...டாக்டர்கள் சொன்ன தகவல் - கிருஷ்ணகிரியை உலுக்கிய ஆணவக்கொலை
கிருஷ்ணகிரியில் தன் மாமனாரால் கொடூரமாக வெட்டப்பட்ட இளம்பெண் அனுசுயாவுக்கு அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் அவருக்கு சுயநினைவு திரும்பி இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை சேர்ந்த சுபாஷ் என்ற இளைஞர், வேறு சமூகத்தை சேர்ந்த அனுசுயா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதனிடையே சுபாஷின் தந்தையான தண்டபாணி தன் மகன் மற்றும் அடைக்கலம் கொடுத்த தன்னுடைய தாய் கண்ணம்மாள் ஆகியோரை கொடூரமாக வெட்டிக் கொன்றார். இதில் அவரால் தாக்கப்பட்டு பலத்த காயமடைந்த அனுசுயா, சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு அறுவை சிகிச்சைகள் செய்து முடிக்கப்பட்டு சுயநினைவுக்கு திரும்பி இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவர்கள் முழு கண்காணிப்பில் சிகிச்சை அளித்து வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.