எந்த நேரத்திலும் 'தலைநகருக்கு' ஆபத்து..!டெல்லியை மூழ்கடிக்க தயாராகும் யமுனை -உச்சகட்ட உஷார் நிலை...

x

யமுனை ஆற்றின் நீர்மட்டம் மீண்டும் அபாயக் கட்டத்தை எட்டக்கூடும் என்பதால் டெல்லி அரசு உஷார் நிலையில் உள்ளது. மீண்டும் யமுனையில் வெள்ளப் பெருக்கு ஏற்படுமா என்பதை முழுமையாக விளக்குகிறது இந்த தொகுப்பு

யமுனை ஆற்றின் நீர்மட்டம் மீண்டும் அதிகரிக்கத்துவங்கியுள்ளது. கடந்த முறையைப்போன்றே, இந்த முறையும் அபாயக் அளவை எட்ட வாய்ப்பிருப்பதால், மீண்டும் இழப்புகளை சந்திக்க கூடாது என்ற நோக்கத்தில் டெல்லி அரசு தயார் நிலையில் உள்ளது. ஏனெனில் "உத்தரகாண்ட் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தின்" சில பகுதிகளில் மழை பெய்யத் துவங்கியுள்ளது. தொடர் மழை காரணமாக ஹத்னிகுண்ட் தடுப்பணையில் இருந்து 2 லட்சம் கனஅடிக்கு மேல் தண்ணீர் வெளியேற்றப்படுகின்றது. இந்த தண்ணீர் மொத்தமும் யமுனை ஆற்றில் கலந்து, அதன் நீர் மட்டம் அதிகரித்து வருகின்றது.

கடந்த முறையைப் போல மெத்தனமாக இல்லாமல், இந்த முறை பாதிக்கப்படக்கூடிய பகுதிகளுக்கு சென்று அதிகாரிகள் எச்சரிக்கை செய்துள்ளனர். டெல்லியின் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் மீண்டும் ஒரு ஆபத்தை சந்திக்க வேண்டுமா என்ற அச்சத்தில் இருக்கின்றனர். நிலைமையை சமாளிக்க வேண்டும் என்பதற்காகவே, , மத்திய மாவட்டம், யமுனா பஜார் மற்றும் யமுனா கதர் போன்ற பகுதிகளில் போதுமான முன் தாயரிப்புகளை அதிகாரிகள் செய்துள்ளனர்.

தவிர்க்கமுடியாத நிலையில் மீண்டும் வெள்ளம் ஏற்படுமெனில், தாழ்வான பகுதிகள் தண்ணீரில் மூழ்கும். இது போன்ற மோசமான நிலைகளில், பாதிக்கப்படும் மக்கள் நெடு நாட்கள் நிவாரண முகாம்களில் தங்க வேண்டி இருக்கும். அதற்கெல்லாம் தாழ்வான பகுதியில் இருக்கும் மக்களை தயார்படுத்த வேண்டும். இதற்கிடையில் ஹிமாச்சல் பிரதேசம், மற்றும் உத்ரகாண்ட் பகுதிகளில் ஜூலை 25ம் தேதி வரை கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையமும் கூறியுள்ளது. அங்கு மட்டுமல்ல, இந்தியா வின் பல பகுதிகளில் அடுத்த சில நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை கொடுக்கப்பட்டிருக்கிறது. பல மாநிலங்களில் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியிருக்கும் நிலையும் ஏற்பட்டிருக்கிறது.

மழைக்காலங்களுக்கு முன்னதாகவே, தண்ணீர் தேங்கும் இடங்கள், பாலப் பிரச்னைகள், நீர் தேக்கங்களின் உயரத்தை அதிகப்படுத்தல் போன்ற வேலைகளை அரசு திட்டமிட்டு செய்துவிட்டால், மழைக் காலத்தில் கவலைப்படத்தேவையில்லை என்பதே பொது மக்களின் கருத்தாக இருக்கின்றது.


Next Story

மேலும் செய்திகள்