தினந்தந்தி - எஸ்ஆர்எம் சார்பில் கல்விக்கண்காட்சி... 12-ம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு ஆலோசனை

x

நெல்லையில், தினத்தந்தி மற்றும் எஸ்ஆர்எம் கல்வி நிறுவனங்கள் சார்பில் பிளஸ் டூ விற்கு பிறகு என்ன படிக்கலாம் என்பது தொடர்பான கல்வி கண்காட்சி இன்று தொடங்கியது.

நெல்லை பாளையங்கோட்டை நூற்றாண்டு மண்டபத்தில் 2 நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியில், எஸ் ஆர் எம் திருச்சி மற்றும் ராமாபுரம் கல்லூரி சார்பிலும் வேல்ஸ் பல்கலைக்கழகம், டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி உள்பட 40-க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள் அரங்குகள் அமைத்துள்ளன. எஸ்ஆர்எம் கல்வி நிறுவனங்களின் தலைவர் நிரஞ்சன், தினத்தந்தி நெல்லை பதிப்பின் மேலாளர் ஜனார்த்தனன் உள்ளிட்டோர் குத்துவிளக்கேற்றி கண்காட்சியை தொடங்கி வைத்தனர். இங்கு, 12ம் வகுப்பு தேர்வுக்கு பிறகு என்ன படிக்கலாம், மாணவர்கள் எந்த துறையை தேர்வு செய்யலாம் என்பன உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்ட வருகின்றன. கண்காட்சியில், நூற்றுக்கணக்கான மாணவர்கள் பங்கேற்றுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்