புதிய கடைகள் கட்டுவதற்காக இடிக்கப்பட்ட தினசரி சந்தை.. போராட்டத்தில் ஈடுபட்ட வியாபாரிகள்

x

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி நகராட்சி சந்தையில், கடைகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நகராட்சிக்கு சொந்தமான தினசரி சந்தையில் கடைகளை இடித்து விட்டு, 6 கோடியே 87 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 250 கடைகள் கொண்ட சந்தை கட்டுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்த செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, கடைகளை இடிக்க கூடாது என வியாபாரிகள் வழக்கு தொடர்ந்தனர். ஆனால், கடைகளை இடிப்பதற்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுத்து விட்டது. இதைத் தொடர்ந்து, கடைகளை காலி செய்ய கடந்த 14-ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டது. இந்நிலையில், கடைகளை இடிக்கும் பணியை நகராட்சி நிர்வாகம் இன்று தொடங்கியது. அப்போது, எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட வியாபாரிகளை போலீசார் கைது செய்தனர். பின்னர், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கடைகளை இடிக்கும் பணி நடைபெற்றது.


Next Story

மேலும் செய்திகள்