உருவானது மாண்டஸ் புயல்.. சென்னைக்கு 640 கிலோமீட்டர் தொலைவில் புயல் மையம்
உருவானது மாண்டஸ் புயல்.. சென்னைக்கு 640 கிலோமீட்டர் தொலைவில் புயல் மையம்
வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், மாண்டஸ் புயலாக வலுப்பெற்றதாக இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. காரைக்காலுக்கு தென்கிழக்கில் 560 கிலோமீட்டர் மற்றும் சென்னைக்கு தென்கிழக்கில் 640 கிலோமீட்டர் தொலைவிலும் புயல் மையம் கொண்டுள்ளது. வரும் 9-ஆம் தேதி நள்ளிரவு புதுச்சேரிக்கும், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா விற்கும் இடையே புயல் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழக கடலோரப் பகுதிகளில் இன்று கன முதல் மிக கனமழையும், நாளை வட கடலோர மாவட்டங்களில் மிக முதல் அதிக கனமழையும் பெய்யக் கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story