வங்கக்கடலில் உருவான சிட்ராங் புயல் - மூன்று மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

x

சிட்ராங் புயல் உருவானதன் காரணமாக சென்னை, கடலூர், நாகை, பாம்பன் துறைமுகங்களில் இரண்டாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

மேற்கு மத்திய மற்றும் கிழக்கு மத்திய வங்க கடலில் ஏற்பட்டுள்ள ஆழ்ந்த தாழ்வு நிலை வடமேற்கு நோக்கி நோக்கி நகர்ந்து, புயலாக மாறியது. சிட்ராங் என பெயரிடப்பட்ட புயல், போர்ட் பிளேயருக்கு வடமேர்கே 730 கிலோ மீட்டர் தூரத்திலும், சாகர் தீவில் இருந்து தெற்கே 580 கிலோ மீட்டர் தூரத்திலும், வங்கதேசத்தின் தென்மேற்கே 770 கிலோ மீட்டர் தூரத்திலும் மையம் கொண்டுள்ளது. நாளை அதிகாலை டின்கோனா தீவு மற்றும் சாண்ட்விப் இடையே வங்கதேசத்தில் புயல் கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சென்னை, எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, கடலூர், நாகை, பாம்பன், தூத்துக்குடி துறைமுகங்களில் இரண்டாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்