125 கி.மீ. வேகத்தில் வீசிய சூறாவளி.. வேரோடு பறந்த 500 மரங்கள்.. அடுத்த 5 நாட்களுக்கு.. 'எச்சரிக்கை'
பிபர்ஜாய் புயல், குஜராத் கடலோர பகுதியை நேற்றிரவுத் தாக்கியது.
பிபோர்ஜோய் புயல், நேற்று மாலை 4.30 மணியளவில் குஜராத் மாநிலம், சவுராஷ்டிரா மற்றும் கட்ச் கடலோர பகுதியில் கரைகடக்கத் தொடங்கியது. இதனால், கடலோரப் பகுதியில் மணிக்கு 110 கிலோ மீட்டர் முதல் 125 கிலோமீட்டர் வேகம் வரை பலத்த காற்று வீசியது. பலத்த காற்றுடன் பலத்த மழையும் பெய்து வருகிறது. பல்வேறு இடங்களில் 500-க்கும் மேற்பட்ட மரங்கள் வேருடன் சாய்ந்தன. மின்கம்பங்களும் சாய்ந்துள்ளதால் 940 கிராமங்கள் இருளில் மூழ்கின. இந்தப் புயல் தாக்கியதில் பவ்நகர் மாவட்டத்தில் 2 பேர் உயிரிழந்தனர். 22 பேர் காயமடைந்தனர். 23 விலங்குகள் உயிரிழந்தன. சாலையில் விழுந்த மரங்களை அப்புறப்படுத்தும் பணியில் ராணுவத்தினரும் பேரிடர் மீட்புக் குழுவினரும் ஈடுபட்டுள்ளனர். அடுத்த ஐந்து நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.இந்நிலையில், புயல் பாதிப்பு நிலவரம் குறித்து குஜராத் முதலமைச்சர் பூபேந்திர படேலிடம் பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக கேட்டறிந்தார்.