இன்று கரையை கடக்கும் 'பிபோர்ஜாய்' புயல்.. 145 கி.மீ வேகத்தில் வீசப்போகும் சூறாவளி - ரெடியான தேசிய பேரிடர் மீட்பு குழுக்கள்

x

அரபிக் கடலில் உருவாகியுள்ள 'பிபோர்ஜாய்' புயல், இன்று (ஜூன் 15) கரையை கடக்கவுள்ள நிலையில், பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளனர்...

அரபிக்கடலில் மையம் கொண்டுள்ள, 'பிபோர்ஜாய்' புயல் குஜராத் மாநிலத்தின் கட்ச் வளைகுடா பகுதியில், இன்று பிற்பகலில் கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ள நிலையில், 50ஆயிரம் பேர் முகாமிற்கு மாற்றப்பட்டுள்ளனர். மேலும், பெரும்பாலான இடங்களில் கனமழையும், மணிக்கு 145 கிலோ மீட்டர் வரை காற்றின் வேகமும் இருக்கக்கூடும் என்பதால், மத்திய, மாநில அரசுகள் தயார் நிலையில் உள்ளன. தேசிய பேரிடர் மீட்பு பிரிவின் 12 குழுக்கள் முகாமிட்டுள்ள சூழலில், வட மேற்கு ரயில்வே, மேற்கு ரயில்வே மண்டலங்களில் பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும், குஜராத், கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, லட்சத்தீவுகளை சேர்ந்த மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனிடையே, பாதிப்புகளை சமாளிக்க முப்படைகளின் தயார் நிலை குறித்து பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆய்வு மேற்கொண்டார்.


Next Story

மேலும் செய்திகள்