"உதட்டுல வெட்டுக்காயம், பல் உடைஞ்சு இருந்துச்சு"..."என் பிள்ளைய அடிச்சே கொன்னுட்டாங்க" - காவலர்கள் மீது தாய் புகார்

x

செங்கல்பட்டு சிறுவர் சீர்த்திருத்த பள்ளியில் உயிரிழந்த சிறுவனின் உடல் உடற்கூராய்வுக்கு பிறகு தகனம் செய்யப்பட்டது. தாம்பரம் அடுத்த கன்னடபாளையத்தை சேர்ந்த 17 வயது சிறுவன் ரயில்வே துறைக்கு சொந்தமான பேட்டரியை திருடியதாக கடந்த 29ம் தேதி கைது செய்யப்பட்டார். பின்னர், சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்ட சிறுவன், உடல்நல குறைவால் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. சிறுவனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது தாய் நிர்மலா குற்றம்சாட்டிய நிலையில், உடற்கூராய்வு நடைபெற்றது.


Next Story

மேலும் செய்திகள்