தண்ணீரில் தோன்றிய தெய்வம்.. அதிசயத்து போன கடலூர் மக்கள்
- கடலூர் அருகே மீன்பிடிக்க தண்ணீர் இறைத்தபோது 250 கிலோ எடையுள்ள விநாயகர் சிலை கிடைத்துள்ளது.
- ஆதிவராகநல்லூரை சேர்ந்த கல்யாணசுந்தரம் மற்றும் சுபாஷ் ஆகியோர் அங்குள்ள வாய்க்காலில் மீன்பிடிப்பதற்காக தண்ணீரை இறைத்துள்ளனர்.
- அப்போது அங்கு புதைந்த நிலையில் இருந்த பிரமாண்ட கருங்கல் விநாயகர் அவர்களுக்கு காட்சி அளித்துள்ளார்.
- உடனடியாக விநாயகரை சுத்தம் செய்த பொதுமக்கள் சூடம் ஏற்றி வழிபாடு நடத்தியுள்ளனர்.
- இது குறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற வருவாய்துறை அதிகாரிகள் விநாயகர் சிலையை மீட்டு ஆய்வு செய்து வருகின்றனர்.
Next Story