CSK உயிர் RCB கையில்.. இன்று ஜெயிக்கணுமா? தோக்கணுமா? - BP ஏற்றும் பிளேஆஃப் ரேஸ்

x

ஐபிஎல் தொடரின் இன்றையப் போட்டியில் பெங்களூரு அணி தோல்வி அடைந்தால், சென்னை மற்றும் லக்னோ அணிகள் பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் சூழல் உருவாகி உள்ளது.

ஐபிஎல் 65வது லீக் போட்டியில் ஹைதராபாத் மற்றும் பெங்களூரு அணிகள் இரவு 7.30 மணிக்கு ராஜீவ்காந்தி மைதானத்தில் மோத உள்ளன.

புள்ளிப்பட்டியலில் 12 புள்ளிகளுடன் 5வது இடத்தில் இருக்கும் பெங்களூருக்கு, இன்றையப் போட்டியை தவிர்த்து மேலும் ஒரு போட்டி மீதம் இருக்கிறது.

இன்றையப் போட்டியில் பெங்களூரு வெற்றி பெற்றால், அந்த அணியின் பிளே-ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பு பிரகாசமாகும்.

ஒருவேளை இன்றையப் போட்டியில் பெங்களூரு தோல்வி அடைந்தால், 15 புள்ளிகளைப் பெற்றுள்ள சென்னை மற்றும் லக்னோ அணிகள், தங்களின் கடைசி லீக் போட்டியின் முடிவைக் கணக்கில் கொள்ளாமலேயே பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும்.

பெங்களூரு அணி இன்று வெற்றி பெற்றால், சென்னை மற்றும் லக்னோ அணிகளின் பிளே ஆஃப் வாய்ப்பு, தங்களின் கடைசி லீக் ஆட்டத்தின் வெற்றி மூலமாகவோ அல்லது மற்ற அணிகள் மோதும் போட்டிகளின் முடிவைப் பொறுத்தோ அமையும்.


Next Story

மேலும் செய்திகள்