கொல்கத்தாவின் சுழலில் வீழ்ந்த சென்னை.. ஏமாற்றத்தில் சி.எஸ்.கே ரசிகர்கள்!

x

வெற்றி பெற்றால் பிளே ஆப் என்ற கனவோடு விளையாடிய சென்னை அணி 61 ஆவது லீக் ஆட்டத்தில் கொல்கத்தாவிடம் தோல்வியடைந்தது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி, 20 ஓவர்கள் முடிவில் 144 ரன்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய கொல்கத்தா அணி 18.3 ஓவர்களில் 147 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. நேர்த்தியாக விளையாடிய கொல்கத்தாவின் ரிங்கு சிங் மற்றும் கேப்டன் ராணா இருவரும் அரைசதம் அடித்தனர். வெற்றி பெற்றால் பிளே ஆப் என்ற கனவோடு மைதானத்திற்கு வந்த சென்னை ரசிகர்கள், ஆட்டம் முடிவதற்கு முன்பே தோல்வி விரக்தியில் மைதானத்தில் இருந்து சோகத்துடன் வெளியேறினர்.


Next Story

மேலும் செய்திகள்