பெற்ற மகளிடமே அத்துமீறிய கொடூரம் - தந்தைக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை
புதுக்கோட்டை அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 43 வயதான நபர், 16 வயதான மகளிடம் அத்துமீறியுள்ளார். கடந்த 2021ல் நடந்த இந்த சம்பவத்தில் சிறுமியும் கர்ப்பமடைந்தார். ஆனாலும் குடும்ப மானம் போய் விடும் என்பதால் வேறு ஒருவரை கூறு என மகளையே மிரட்டியிருக்கிறார் அவர். இருந்தபோதிலும் நீதிபதி முன்பாக தன் தந்தையே காரணம் என கூறியிருக்கிறார் சிறுமி. அதேநேரம் சிறுமிக்கு பிரசவத்தின் போது குழந்தை இறந்தே பிறந்தது. இதுதொடர்பான வழக்கை விசாரித்த புதுக்கோட்டை மகளிர் நீதிமன்ற நீதிபதி சத்யா, சிறுமியின் தந்தைக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை மற்றும் 5 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார். மேலும் சிறுமிக்கு 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் அரசுக்கு உத்தரவிடப்பட்டது.
Next Story