கச்சா எண்ணெயாக மாறிய நாகை கடல்.. கடலில் பைப் லைன் உடைந்ததால் சிக்கல் - "மீன் பிடித்தாலும் மக்கள் வாங்குவார்களா?"
- நாகை மாவட்டம் நாகூர் அடுத்துள்ள பனங்குடியில் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான சிபிசிஎல் எண்ணெய் நிறுவனம் இயங்கி வருகிறது.
- கப்பல்களுக்கு எண்ணெய்யை கொண்டு செல்ல பனங்குடி ஆலையில் இருந்து காரைக்கால் துறைமுகம் வரை கடலுக்கு அடியே பைப்லைன் அமைக்கப்பட்டுள்ளது.
- இந்த பைப்லைன் மூலமாக தான் கச்சா எண்ணெய் பல்வேறு இடங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது.
- இந்நிலையில், வியாழன் இரவு அன்று, பைப் லைனில் உடைப்பு ஏற்பட்டு, பல லிட்டர் கச்சா எண்ணெய் கடலில் கலக்க ஆரம்பித்தது. இது குறித்து இந்திய கடலோர காவல் படைக்கு சொந்தமான டோர்னியர் ரக விமானம் மற்றும் இரண்டு அதிவேக கப்பல்கள் ஆய்வு மேற்கொண்டன.
- கச்சா எண்ணெய்யில் இருந்து வெளியேறும் நெடி, வாயு ஆகியவற்றால் கண் எரிச்சல் மற்றும் மூச்சு திணறலால் அதிகளவில் மக்கள் பாதிக்கப்பட்டனர்.
- இந்நிலையில், கடலில் சுமார் ஆறு கிலோ மீட்டர் தூரத்திற்கு கச்சா எண்ணெய் பரவியிருப்பதாக தெரிவிக்கும் மீனவர்கள்.. மீன்கள் செத்து மிதப்பதை சுட்டிக்காட்டி, தங்கள் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியிருப்பது குறித்து வருத்தம் தெரிவித்தனர்.
- இனி மீன் பிடித்தாலும், அதனை மக்கள் வாங்குவார்களா? என்பது கேள்விக்குறி தான் என்றும் அவர்கள் வேதனை தெரிவித்தனர்.
Next Story