கனமழையால் சாய்ந்த நெற்பயிர்கள்... அறுவடை செய்ய ஆட்கள் கிடைக்காத நிலை - அறுவடையில் இறங்கிய இரு சகோதரிகள்
திருவாரூர் மாவட்டத்தில் கனமழையால் சாய்ந்த நெற்பயிர்களை அறுவடை செய்ய ஆட்கள் கிடைக்காததால், 2 சகோதரிகள் வயலில் இறங்கி அறுவடை செய்து வருகிறார்கள்.
அந்த மாவட்டத்தில் 430 ஏக்கர் நெற்பயிர்கள் சேதம் அடைந்துள்ள நிலையில், வடிகால் வசதி இல்லாததால், வயல்களில் தேங்கியிருக்கும் மழை நீரை வெளியேற்ற முடியவில்லை.
ஒரிரு நாட்களில் மழை நீரை வெளியேற்றவில்லை என்றால், நெற்பயிர்கள் மீண்டும் முளைத்து விடும் அபாயம் உள்ளது.
இந்நிலையில், பாரதி மூலங்குடி கிராமத்தில், சகோதரிகளான லெட்சுமியும், பிரேமாவும், அறுவடைக்கு ஆள் கிடைக்காததால், 3 ஏக்கரில் பயிரிட்டுள்ள நெற்பயிர்களை அறுவடை செய்து வருகிறார்கள்.
Next Story