கோஷ்டி மோதலில் இளைஞர் படுகொலை... பிச்சைக்காரனாக சுற்றி திரிந்த குற்றவாளி...
மதுரை செக்கானூரணி அருகே, கடந்த 1998ஆம் ஆண்டு தார்பாய் முருகன் என்பவரது கூட்டாளிகளுக்குள் கோஷ்டி மோதல் ஏற்பட்டது. இதில், வத்தலக்குண்டு பகுதியை சேர்ந்த ரமேஷ் கத்தியால் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலையில் முக்கிய குற்றவாளியான திண்டுக்கல்லை சேர்ந்த ரமேஷ்குமார் என்பவரை போலீசார் தேடி வந்தனர். ரமேஷ்குமார் கடந்த 22 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வந்த நிலையில், பிச்சைகாரர் போல் மாறுவேடத்தில் சுற்றித்திரிவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. திண்டுக்கல் பகுதியில் சுற்றித்திரிந்த ரமேஷ்குமாரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Next Story