கனடாவில் வேலை வாங்கி தருவதாக ஆசை - "உறுதிமொழி பத்திரம் மூலம் பல லட்சம் மோசடி"
தஞ்சாவூர் மாவட்டம், அய்யம்பேட்டையை சேர்ந்த கோபி சங்கர் மற்றும் அகிலா தம்பதி, சமூக வலைத்தளத்தில் JOB in சிங்கப்பூர் என்ற விளம்பரத்தை பார்த்து, அதில் இருந்த தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு பேசி உள்ளனர். அதில் கரூர் மாவட்டம், பள்ளப்பட்டி சேர்ந்த பஜீல் ரகுமான் என்பவர் தங்களது ஏஜென்சி மூலம்சிங்கப்பூர் மற்றும் கனடா நாடுகளில் ஆட்களை அனுப்புவதாக கூறியுள்ளார். கனடாவில் ஒரு லட்சம் சம்பளத்திற்கு வேலை இருப்பதாகவும், வேலையில் சேர்வதற்கு முன் 12 லட்சம் செலவுத்தொகை ஆகும் என்று ஆசை வார்த்தை கூறியுள்ளனர். அந்தபணத்தை கோபி சங்கர் மற்றும் அகிலா தம்பதியிடம் வாங்கிக்கொண்டு அவர் போலியான ஒர்க்கிங் பர்மிட் விசா கொடுத்து ஏமாற்றியதாக கூறப்படுகிறது. இதனால் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டபோது, கொலை மிரட்டல் விடுப்பதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கரூர் எஸ்.பி அலுவலகத்தில் மனு அளித்தனர்.