ட்விட்டரில் வரவுள்ள அசத்தல் அப்டேட்
ட்விட்டர் பயனாளர்களின் நீண்ட கால கோரிக்கையான எடிட் பட்டன் வசதியை சோதித்து வருவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
தற்போது ட்விட்டரில் பதிவிட்ட ஒரு கருத்தில் தவறு இருந்தால் எடிட் செய்ய முடியாது.
இந்த வசதியை செய்யுமாறு பயனாளர்களால் தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், கட்டண சந்தாதாரர்களுக்கு எடிட் பட்டன் வசதியை அந்நிறுவனம் அறிமுகம் செய்யவிருக்கிறது.
அதன்படி ப்ளூ பயனர்கள் இருக்கும் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, கனடா மற்றும் அமெரிக்காவில் இந்த வசதி விரைவில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Next Story