அரைமணி நேரத்தில் அசத்தல் ரெசிபி... Chicken Dumplings செய்றது இவ்ளோ ஈஸியா?

x

குட்டி பட்ஜெட்டில் பெரிய ரெசிபி...

சர்வதேச சமையலில் இன்று நாம் சமைக்க இருக்கும் ரெசிபி அமெரிக்க நாட்டின் பிரபலமான உணவாக இருக்கும் Cozy Chicken Dumplings…

Cozy Chicken Dumplings சமைக்க தேவையான பொருட்கள்…. சதை நிறைந்த சிக்கன் , எண்ணெய் , கேரட் , வெங்காயம் , பூண்டு , வெண்ணெய் , கார்ன்ஃபிளார் மாவு , சிக்கன் ஸ்டாக் , மில்க் கிரீம் , தைம் இலை , பிரியாணி இலை , பட்டாணி , சோடா மாவு , உப்பு , மிளகு தூள் , கொத்த மல்லி அவ்வளவு தான்…. இனி சமையலை ஆரம்பித்து விடலாம்….

முதலில் கொதிக்கும் பாத்திரத்தில் இரண்டு ஸ்பூன் அளவு எண்ணெய்யை ஊற்றி அதில் ஒரு கிலோ அளவிலான சிக்கனை போட்டு நன்றாக வதக்க வேண்டும்… சிக்கனை வதக்கி பொன்நிறத்திற்கு வந்ததும் அதை தனியாக பிரித்து வேறொரு பாத்திரத்தில் எடுத்து வைத்து கொள்ள வேண்டும் …

இப்போது சிக்கனை வதக்கிய அதே பாத்திரத்தில் சிறிதாய் நறுக்கிய கேரட் அரை கப் , பொடிதாய் நறுக்கிய வெங்காயம் அரை கப் அளவு , பொடி பொடியாக நறுக்கிய மூன்று பூண்டு பற்கள் , ஐந்து ஸ்பூன் அளவு வெண்ணெய் , ஆறு ஸ்பூன் அளவு கார்ன்ஃபிளார் மாவு என மொத்த பூரணங்களையும் போட்டு நன்றாக வதக்கி விட வேண்டும்… பிறகு இவைகளோடு முதலில் பொரித்து வைத்த சிக்கன் துண்டை மீண்டும் பாத்திரத்தில் போட்டு அதில் ஆறு கப் அளவு சிக்கன் ஸ்டாக்கை ஊற்றி , கூடவே அரை கப் அளவு மில்க் கிரீமை ஊற்றி நன்றாக கலக்கி விட வேண்டும்…

இப்போது நம் ரெசிபிக்கு கூடுதல் சுவை கொடுக்க அரை ஸ்பூன் அளவு தைம் இலை பொடி… வாசனை மன மணக்க இரண்டு பிரியாணி இலையை போட்டு கொஞ்சம் கிளரி விட வேண்டும்….

சமையலின் அடுத்த கட்டமாக நம் அனைவருக்கும் பிடித்த பச்சை பட்டாணியை ஒன்றரை கப் அளவு பாத்திரத்தில் போட்டு… ஒரு 15 நிமிடம் இளம் சூட்டில் கொதிக்க விட்டால் போதும் நம் சமையலில் பாதி வேலை முடிந்தது…

ம்ம்ம்… சரி வாங்க இருக்குற மீதி வேலையை முடிச்சுடலாம்….

இப்போது வேறு ஒரு பாத்திரத்தில் இரண்டு கப் அளவு கார்ன்ஃபிளார் மாவை போட்டு… அதன் கூடவே ஒரு ஸ்பூன் அளவு சோடா மாவு , அரை ஸ்பூன் அளவு உப்பு மற்றும் மிளகு தூள் போட்டு நன்றாக மிக்ஸ் செய்துகொள்ளவும் அடுத்து மிக்ஸ் செய்த மாவில் ஒன்றரை கப் அளவு மில்க் கிரீமை ஊற்றி….

சப்பாத்தி மாவு பதத்திற்கு பிணைந்து… ஒரு பிடி அளவு எடுத்து உள்ளங்கையில் வைத்து உருண்டை பிடித்து கொள்ள வேண்டும்… அடுத்து தயாரான ஒவ்வொரு உருண்டையையும் கொதிக்கும் குழம்பில் போட்டு அதன் மேலே நான்கு ஸ்பூன் அளவு பொடிதாய் நறுக்கிய கொத்த மல்லியை தூவி விட்டு…. ஒரு 15 நிமிடம் கொதிக்க விட்டால் போதும் சுவையான அசத்தலான Cozy Chicken Dumpling ரெடி…..


Next Story

மேலும் செய்திகள்