விழுந்து நொறுங்கிய கடலோர காவல் படை ஹெலிகாப்டர்..! விபத்து நடந்தது எப்படி..?

x

கேரள மாநிலம் கொச்சி அருகே கடலோர காவல் படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் பயிற்சியின்போது விபத்துக்குள்ளானது தொடர்பான விசாரணை தொடங்கி உள்ளது. விமான நிலைய அதிகாரிகள் மற்றும் கடலோர காவல் படை அதிகாரிகள் தனித்தனியே விசாரணையை இன்று துவங்கியுள்ளனர். இதனிடையே, ஓடுதளத்தில் இருந்து புறப்பட்ட பிறகு பக்கவாட்டில் ஏற்றத்தாழ்வு ஏற்பட்டதே விபத்துக்கான காரணம் என முதற்கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்