சாலையில் சுற்றித்திரிந்த மாடுகள்...ஓனர்களுக்கு 4 லட்சம் அபராதம் - மாநகராட்சி அதிரடி
நெல்லை மாநகராட்சி மேலப்பாளையம் மண்டலத்தில், போக்குவரத்துக்கு இடையூறாக 63 மாடுகள் சாலையில் சுற்றித்தரிந்தன.
இந்த மாடுகளை மாநகராட்சி அலுவலர்கள் பிடித்த நிலையில், 48 மாடுகளின் உரிமையாளர்கள், அபராதம் செலுத்தி, அதை வாங்கி சென்றனர்.
மாடு பிடித்ததன் மூலம் ஒரே நாளில் நெல்லை மாநகராட்சிக்கு லம்பாக நான்கு லட்சம் ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது.
மீதமுள்ள 15 மாடுகளின் உரிமையாளர்கள்அபராதம் செலுத்தாவிட்டால் உடனடியாக ஏலம் விடப்படும் என்று அதிகாரிகளை தெரிவித்துள்ளனர்.
Next Story