தமிழகத்தின் கொரோனா பாதிப்பு நிலவரம்... அமைச்சர் கொடுத்த அப்டேட்

x

கோவிட் - 19 நிலவரம் மற்றும் முன்னேற்பாடுகள் குறித்து டெல்லியில் மாநில சுகாதார அமைச்சர்களுடன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்ட்வியா காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார். இதில் பல்வேறு மாநிலங்களில் இருந்து காணொலி வாயிலாக சுகாதார அமைச்சர்கள் பங்கேற்றனர். நாகர்கோயிலில் இருந்து காணொலி மூலம் பங்கேற்ற தமிழக சுகாதார அமைச்சர் மா.சுப்ரமணியன், தமிழ்நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு 10 - க்குள் உள்ளதாக கூறியுள்ளார். மேலும், பாசிட்டிவ் சதவீதம் பூஜ்யம் புள்ளி இரண்டு சதவிகிதம் என தெரிவித்துள்ளார். புதிய மாறுபாடுகளை கண்டறிதல், மற்றும் கோவில் தொற்று மாதிரிகளை மாதந்தோறும் முழு மரபணு வரிசைப்படுத்துதல் ஆகிய பரிசோதனை ஆய்வக வசதிகள் மாநில அளவில் தமிழ்நாட்டில் உள்ளது கூறியுள்ளார். தேவையான கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை எடுக்க அனைத்து கோவிட் பாசிட்டிவ் மாதிரிகளும் முழு மரபணு வரிசைப்படுத்துதல் முறைக்கு உட்படுத்தப்படுவதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்