கொரோனாவை விட ஆபத்தானதா XBB வைரஸ்? - மத்திய சுகாதாரத் துறை விடுத்த எச்சரிக்கை
கொரோனாவை விட ஆபத்தானது கொரோனா மாறுபாடான XBB வைரஸ் என சமூக வலைதளங்களில் போலியான தகவல்கள் உலா வருவதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது... இணையத்தில் XBB மாறுபாடு குறித்த போலியான பல தகவல்கள் வலம் வந்து கொண்டிருக்கின்றன... இருமல் காய்ச்சல் இன்றி இது பரவுவதாகவும், டெல்டா மாறுபாட்டை விட 5 மடங்கு அதிக வீரியம் கொண்டது எனவும், கொரோனாவின் முதல் அலையை விட மிகக் கொடியது என்றும் தகவல்கள் பரவி வருகின்றன... அத்துடன் இத்தகவலை குடும்ப நண்பர்கள் அனைவருக்கும் பகிருமாறு தவறான நோய் அறிகுறிகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து போலியான செய்தி உலா வரும் நிலையில், அவற்றை மக்கள் நம்ப வேண்டாம் என மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது...
Next Story