ராகவா லாரன்ஸ் படத்தை வெளியிட ஐகோர்ட் தடை
ராகவா லாரன்ஸ் நடித்துள்ள ருத்ரன் திரைப்படத்தை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
ருத்ரன் திரைப்படத்தின் வட இந்திய டப்பிங் உரிமத்தை 12 கோடியே 25 லட்சம் ரூபாய்க்கு வாங்க, ரெவன்ஸா குளோபல் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்நிலையில், 4 கோடியே 50 லட்சம் ரூபாய் கூடுதலாக செலுத்த கோரிய ருத்ரன் படத்தின் தயாரிப்பு நிறுவனம், ஒப்பந்ததை திடீரென ரத்து செய்துள்ளது. இதை எதிர்த்து ரெவன்ஸா குளோபல் நிறுவனம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், ருத்ரன் படத்த வெளியிட வரும் 24ஆம் தேதி வரை தடை விதித்து உத்தரவிட்டனர். மேலும், வழக்கு தொடர்பாக பதில் அளிக்குமாறு தயாரிப்பு நிறுவனத்திற்கு உத்தரவிட்டனர்.
Next Story