"பிரதமரின் வார்த்தையை மீற முடியவில்லை" தமிம் இக்பால் ஓய்வு முடிவில் திருப்பம்
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் முடிவை திரும்பப் பெறுவதாக வங்கதேச ஒருநாள் அணியின் கேப்டன் தமிம் இக்பால் அறிவித்து உள்ளார். ஆப்கானிஸ்தானுடனான முதல் ஒருநாள் போட்டியில் வங்கதேசம் தோற்ற பிறகு, சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக திடீரென அறிவித்து தமிம் இக்பால் பரபரப்பைக் கிளப்பினார். இந்நிலையில், வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா தொடர்ந்து விளையாடுமாறு தன்னை வலியுறுத்தியதாகவும், அவரது வலியுறுத்தலுக்கு ஏற்ப ஓய்வு முடிவை திரும்பப் பெறுவதாகவும் தமிம் இக்பால் கூறி உள்ளார்.
Next Story