இந்தியாவில் இருமல் மருந்துகளுக்கு.. மத்திய அரசு போட்ட உத்தரவு..! India | Cough Medicines

x

இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் இருமல் மருந்துகளை அரசு ஆய்வுக் கூடங்களில் சோதனைக்கு உட்படுத்துவது அவசியம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்திய இருமல் மருந்துகளை அருந்தியதால் காம்பியாவில் 66 குழந்தைகளும், உஸ்பெகிஸ்தானில் 18 குழந்தைகளும் உயிரிழந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, ஏற்றுமதி மருந்துகளின் தரம் குறித்து மத்திய அரசு தீவிரமாக கண்காணித்து வருகிறது. இதன்படி, வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் வெளியிட்டுள்ள அறிவிக்கையில், வரும் ஜுன் 1ம் தேதி முதல், இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்படும் இருமல் மருந்துகளின் மாதிரிகளை அரசு ஆய்வகத்தில் சோதனைக்கு உட்படுத்தி சான்று பெற வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. சண்டிகர், கொல்கத்தா, சென்னை, ஹைதராபாத், மும்பை, கவுஹாத்தியில் உள்ள ஆய்வகங்களில் சோதனை செய்யப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது. ஏற்றுமதியாளர்கள் மருந்து தயாரிப்புகளை சோதனைக்கு உட்படுத்துவதை, அந்தந்த மாநில அரசுகள் உறுதி செய்யவும் அறிவுறுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்