அமைச்சர்கள், அதிகாரிகள் மீதான ஊழல் பட்டியல் - நடவடிக்கைகள் என்ன? - ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட்ட முக்கிய தகவல் ....

x

அரசியல்வாதிகள், அதிகாரிகள் மீதான ஊழல் பட்டியல் தம்மிடம் அளிக்கப்பட்டாலும் அதன் மீது விசாரணை நடத்த ஆளுநர் மாளிகையில் எந்த கட்டமைப்பும் இல்லை என்று ஆளுநர் ஆர்.என். ரவி தெளிவுபடுத்தியுள்ளார்.

அமைச்சர்களைப் பற்றியும், அதிகாரிகளைப் பற்றியும் சில கட்சித் தலைவர்கள் அளிக்கும் ஊழல் பட்டியல், புகார்கள் மீது என்ன மாதிரியான நடவடிக்கைகள் பாயும் என்ற கேள்விக்கு தனது கருத்துக்களை மூத்த பத்திரிகையாளர்களிடம் ஆளுநர் ஆன்.என்.ரவி. பகிர்ந்து கொண்டார்.

நேற்று ஆளுநர் மாளிகைகளில் மூத்த பத்திரிகையாளர்களிடம் உரையாடிய ஆளுநர் இது பற்றி பேசினார்.

அப்போது பலர் என்னிடம் குறைகளை, ஊழல் பட்டியல்களை கொடுத்திருக்கிறார்கள் என்று தெரிவித்தார்.

அவற்றை ஆளுநர் அலுவலகம் பரிசீலிக்கும், அவற்றில் உள்ள விஷயங்களை உள்வாங்கிக் கொள்ளும் என்றும் அவர் கூறினார்.

ஆனால் அதைப் பற்றி விசாரணை நடத்த ஆளுநர் மாளிகையில் எந்த கட்டமைப்பும் இல்லை என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

புகார்களின் உண்மைத் தன்மை குறித்தும், அவற்றின் மீது நடவடிக்கை எடுப்பது பற்றியும் மாநில அரசுதான் முடிவு செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.

மாநில அரசின் கட்டுப்பாட்டில் ஊழல் கண்காணிப்பு, மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவு செயல்பட்டு வருவதாகவும் ஆளுநர் தெளிவுபடுத்தினார்.

அந்த துறைகளுக்கு தன்னிடம் வரும் புகார் பட்டியலை அனுப்பி வைப்பதாகவும், அவர்கள் புகார்களில் முகாந்திரம் இருந்தால் உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பார்கள் என்றும் ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்