கழுகு, நாய்களுக்கு இரையாகும் சடலங்கள்.. ஆதரவற்ற 6500 சடலங்களை தகனம் செய்யும் நபர்

x

உத்தரபிரதேசத்தில் நாய் மற்றும் கழுகளுக்கு இரையாகும் ஆதரவற்ற சடலங்களுக்கு ஜஸ்பல் சிங் பாலி என்பவர் இறுதி சடங்கு செய்து வருகிறார். உத்தரபிரதேசத்தில் உறவினர்கள் ஆதரவின்றி கிடந்த ஆராயிரத்திற்கும் மேற்பட்ட உடல்களை ஜஸ்பல் சிங் பாலி தகனம் செய்துள்ளார். இது குறித்து பேசிய அவர், தன்னுடைய சிறு வயதில் ஆதரவற்றோரின் சடங்களை கழுகளும், நாய்களும் இரையாக்கி கொண்டதை பார்த்ததாகவும், அதனால் உறவினர்கள் ஆதரவின்றி கிடக்கும் சடலங்களுக்கு தானே இறுதி மரியாதை செய்ய வேண்டுமென முடிவெடுத்ததாகவும் கூறியுள்ளார். 2011ம் ஆண்டில் இருந்து இதுவரை 6500 சடலங்களுக்கு இறுதி சடங்கு செய்துள்ளதாக ஜஸ்பல் சிங் கூறியது, நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்