3ம் சார்லஸுக்கு இன்று முடிசூட்டு விழா - விழாக்கோலம் பூண்ட லண்டன் நகரம்!
இன்று இங்கிலாந்தின் மூன்றாம் சார்லஸ் முடிசூட்டு விழா நடைபெறுகிறது. விழாவில் இந்திய துணை குடியரசுத்தலைவர் ஜெகதீப் தன்கர் பங்கேற்கிறார். இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் மறைவைத் தொடர்ந்து, மூன்றாம் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழா இன்று நடைபெறுகிறது. இன்று நடைபெறும் முடிசூட்டு விழாவில், பாரம்பரிய மரபுப்படி கையில் செங்கோல், தடி ஆகியவற்றை ஏந்தி மூன்றாம் சார்லஸ் மன்னர் அரியணையில் அமர்வார். பிறகு, மூத்த மத குருமார்களால் புனிதப்படுத்தப்பட்டு ஆசீர்வதிக்கப்பட்ட பிறகு, மூன்றாம் சார்லஸ் மன்னருக்கு புனித எட்வர்டின் கிரீடம் சூட்டப்படும். இந்த விழாவில் பங்கேற்குமாறு பல்வேறு உலக நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்தியா சார்பாக, விழாவில் பங்கேற்பதற்காக துணை குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கர், இங்கிலாந்து சென்றுள்ளார்
Next Story