பல லட்சம் உயிர்களை குடித்து.. உலகையே மிரட்டிய அசுரன் 'கொரோனா'.. சர்வதேச அவசரநிலையாக அறிவித்த தினம், இன்று

x

கடந்த 3 ஆண்டுகளில் உலகெங்கும் சுமார் 16 லட்சம் மரணங்களை ஏற்படுத்திய கொரோனா தொற்றுதல், இன்று வரை தொடர்கிறது. இதுவரை சுமார் 67 கோடி பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு, உலக பொருளாதாரத்தை நிலை குலையச் செய்துள்ளது.

2019 நவம்பரில் சீனாவின் ஊஹான் நகரில் முதல் முறையாக கொரோனா தொற்று நோய் மனிதர்களிடம் பரவியது.

ஊஹான் வைரஸ் ஆய்வு மையத்தில், சோதனைக்கு கொண்டு செல்லப்பட்ட மிருகம் ஒன்றில் இருந்து மனிதர்களுக்கு கொரோனா தொற்றியதாக பல்வேறு நாடுகள் குற்றம் சாட்டின. ஆனால் இதை சீனா உறுதியாக மறுத்து வருகிறது.

சீனாவில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு விமானப் பயணம் மேற்கொண்டவர்கள் மூலம் கொரோன தொற்றுதல், படிப்படியாக உலகெங்கும் பரவியது.

இதை தொடர்ந்து கண்காணித்து வந்த உலக சுகாதார நிறுவனம், 2020 ஜனவரியில் இதை சர்வதேச அவசரநிலையாக அறிவித்தது. 2022 மார்ச்சில் பெரும் தொற்றுதல் என்று வகைப்படுத்தியது.

இந்தியாவில் 2020 மார்ச் 24ல் முதல் முறையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறபிக்கப்பட்டது. விமான நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டன.

சாலை போக்கு வரத்துகளுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. ஜூன் மாதத்திற்கு பிறகு ஊரடங்குகள் படிப்படியாக தளர்த்தப் பட்டன.

2021ல் ஏற்பட்ட இரண்டாம் அலை, மேலும் வீரியமாக இருந்த நிலையில், மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

தீவிர முயற்சியால் கொரோனா தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டு, சோதனை செய்யப்பட்டு, அங்கீகரிக்கப்பட்ட பின் அவற்றின் விநியோகம் தொடங்கப்பட்டது.

2022ல் வீரியம் குறைந்த ஒமிக்ரான் ரக கொரோனா வைரஸ் பரவல் உருவானது. பின்னர் படிப்படியாக, கொரோனா பரவல் குறையத் தொடங்கியது.

உலக நாடுகளை உலுக்கிய கொரொனா பரவலை, உலக சுகாதார நிறுவனம், சர்வதேச அவசரநிலையாக அறிவித்த தினம், 2020 ஜனவரி 30.


Next Story

மேலும் செய்திகள்