தாய் நஞ்சுக்கொடியில் கொரோனா.. குழந்தையின் மூளை சென்று பாதிப்பு! -அதிர்ச்சியளிக்கும் மருத்துவ தகவல்..
- கொரோனாவால் பாதிக்கப்பட்ட அம்மாக்களின் நஞ்சுக் கொடி வாயிலாக வயிற்றில் இருந்த 2 குழந்தைகள் மூளை பாதிப்புடன் பிறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- 2020 ஆம் ஆண்டில் டெல்டா மாறுபாட்டின் உச்சக்கட்ட பரவலின் போது தடுப்பூசி கிடைப்பதற்கு முன்பு இக்குழந்தைகள் பிறந்துள்ளனர்...
- குழந்தைகளுக்கு உடல் நல பாதிப்பு ஏற்பட்ட நிலையில், அதில் ஒரு குழந்தை 13வது மாதத்தில் உயிரிழந்துள்ளது.
- மற்றொரு குழந்தைக்கு மருத்துவ சிகிச்சை கொடுக்கப்பட்டது.
- 2 குழந்தைகளின் ரத்தத்தில் அதிகளவு கொரோனா எதிர்ப்பு சக்தி இருந்துள்ளது. அக்குழந்தைகளின் அம்மாக்களுடைய நஞ்சுக் கொடியில் வைரஸ் இருப்பது கண்டறியப்பட்ட நிலையில், இறந்த குழந்தையின் மூளையிலும் வைரஸ் தாக்கத்திற்கான தடயம் கண்டறியப்பட்டது.
- நஞ்சுக் கொடி வாயிலாக குழந்தைகளை கொரோனா வைரஸ் பாதித்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
Next Story