சீனாவை மிரட்டும் கொரோனா பிஎப்.7 - ஒரே நாளில் 3.70 கோடி பேருக்கு பாதிப்பு..? | அச்சத்தில் உறைந்த உலக நாடுகள்
சீனாவில் ஒரே நாளில் மூன்று கோடியே 70 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி இருக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த சில நாட்களாக சீனாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. இந்த நிலையில் வேகமாக பரவி வரும் கொரோனா பாதிப்பு குறித்து சீனாவின் தேசிய சுகாதாரத்துறை ஆணையத்தின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது. அதில், ஒரே நாளில் சுமார் 3 கோடியே 70 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது என தகவல் வெளியானதாக புளூம்பெர்க் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த தகவல் உறுதியாகும்பட்சத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய பாதிப்பை சீனா சந்திக்க நேரிடும் என அஞ்சப்படுகிறது. சீனாவில் மொத்தம் உள்ள மக்கள் தொகையில் 18 சதவீதத்தினருக்கு கொரோனா பாதிப்பு உள்ளதால் உலக நாடுகள் அச்சத்தில் உறைந்துள்ளன.
Next Story