கோர ரயில் விபத்து திட்டமிட்ட சதியா?..."இன்டர்லாக்கிங், தண்டவாள பாயின்ட்" - பகீர் கிளப்பும் ரயில்வே வாரிய உறுப்பினர்கள்

x

ஒடிசா ரயில் விபத்து குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு ரயில்வே வாரியம் பரிந்துரை செய்துள்ள நிலையில், விபத்துக்கு சதி வேலை காரணமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டம், பாஹாநாகா பஜார் பகுதியில், கடந்த 2ம் தேதி நிகழ்ந்த ரயில் விபத்தில் 275 பேர் உயிரிழந்தனர். விபத்து குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு ரயில்வே வாரியம் பரிந்துரை செய்துள்ளதாக மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணன் தெரிவித்திருந்தார். பாயின்ட் இயந்திரம், இன்டர்லாக்கிங்கில் ஏற்பட்ட பிரச்சினையே ரயில் விபத்துக்கு மூலகாரணம் என்பது தெரியவந்ததாக ரயில்வே அமைச்சர் கூறிய நிலையில், சிபிஐ விசாரணைக்கு ரயில்வே வாரியம் பரிந்துரை செய்துள்ளது ஏன்? என்ற கேள்வி எழுந்துள்ளது. இன்டர்லாக்கிங் தொழில்நுட்பம் மிகவும் பாதுகாப்பானது என்றும், இதில் கோளாறு ஏற்பட வாய்ப்பு இல்லை என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில், வெளிநபர்கள் தண்டவாள பாயின்ட் இயந்திரத்தை சேதப்படுத்தியிருக்க வாய்ப்பு உள்ளது என ரயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விபத்துக்கு சதிச்செயல் காரணமாக இருக்கக்கூடும் என்பதற்கான வாய்ப்புகளை மறுக்க முடியாது என்று ரயில்வே வாரிய உறுப்பினர் ஜெயவர்மா சின்ஹா தெரிவித்துள்ளார். விசாரணை குழுவின் இறுதி அறிக்கைக்கு பின்னரே விபத்து தற்செயலானதா அல்லது சதி வேலையா என்பது தெரியவரும்.


Next Story

மேலும் செய்திகள்