விபத்து நடந்த பகுதி வழியே முதல் ரயிலாக கோரமண்டல் எக்ஸ்பிரஸ் சென்னையிலிருந்து இன்று புறப்படுகிறது
ஒடிசா ரயில் விபத்தால் இதுவரை ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று முதல் ரயில்கள் வழக்கம்போல் இயக்கப்படும் என ரயில்வே அறிவித்துள்ளது.
நேற்று வரை 90 ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று வரை 133 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ரயில் பாதை சீரமைப்பு காரணமாக இன்று முதல் ரயில் சேவை துவங்கப்பட்டுள்ளது. 56 ரயில்கள் மாற்று பாதையில் இயக்கப்பட்டுள்ளன. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து விபத்து நடைபெற்ற பகுதி வழியாக முதல் ரயிலான கோரமண்டல் ரயில் காலை 10:45 மணிக்கு இயக்கப்படுகிறது. 3 மணி நேரம் 45 நிமிட தாமதத்தில் இந்த ரயில் இயக்கப்பட உள்ளது. காலை 10.45 மணிக்கு புறப்படும் கோரமண்டல் ரயில், விஜயவாடா, ராஜமுந்திரி விசாகப்பட்டினம் வழியாக ஆந்திராவை கடந்து ஒடிசாவின் பிரம்மப்பூர், புவனேஸ்வர் மற்றும் பதராக் ஆகிய பகுதிகளின் வழியாக விபத்து நடைபெற்று இருப்புப் பாதை சீரமைக்கப்பட்ட பாலசோரைக் கடந்து கொல்கத்தாவின் ஷாலிமர் ரயில் நிலையத்தை நாளை சென்றடையும்