திருவள்ளுவர் சிலை கல்வெட்டை மூடியதால் சர்ச்சை

x

திருவள்ளுவர் சிலை கல்வெட்டை மூடியதால் சர்ச்சை

கர்நாடகாவில் திருவள்ளுவர் சிலை வளாக புனரமைப்பு பணிகளுக்கு இடையூறு செய்வோர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த 2009ஆம் ஆண்டு கருணாநிதி மற்றும் எடியூரப்பா மூலம் பெங்களூருவில் அல்சூர் ஏரிக்கரை பகுதியில் திருவள்ளுவர் சிலை திறக்கப்பட்டது. சிலையை சுற்றி பீடம் அமைப்பதற்காக எடியூரப்பா பெயர் கொண்ட கல்வெட்டை மறைத்ததாக குற்றம் சாட்டிய பாஜகவினர், சம்பந்தப்பட்ட பகுதியை இடித்து அகற்றினர்.

இதற்கு கண்டனம் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர், புனரமைப்பு பணிக்கு இடையூறு செய்வதாக பாஜகவினர் மீது குற்றம்சாட்டினர். மேலும் திருவள்ளுவர் சிலை வளாகத்தை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி டிஜிபி அலுவலகத்தில் காங்கிரஸ் கட்சியினர் புகார் அளித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்