தீயாய் பரவிய சர்ச்சை வீடியோ.. திமுக MP-க்கு தலைமை கெடு.. "தவறினால் விளைவுகள் பயங்கரமாய் இருக்கும்"

x

நெல்லையில் கிறிஸ்தவ மதபோதகர் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக நெல்லை திமுக எம்.பி. ஞானதிரவியத்திடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது கட்சி தலைமை...இந்த விவகாரத்தில் நடந்தது என்ன என்பதை விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...


நெல்லை மக்களவை தொகுதி திமுக எம்.பி ஞானதிரவியம். இவர் நெல்லையில் உள்ள சி.எஸ்.ஐ மண்டலத்தில் பொறுப்பாள ராகவும் ஜான்ஸ் பள்ளியில் தாளாளராகவும் இருந்துவந்தார்.

இந்த நிலையில், நெல்லை சி.எஸ்.ஐ. திருமண்டலத்தின் பேராயராக இருக்கும் பர்னபாஸ் என்பவருக்கும் மற்றொரு தரப்பை சேர்ந்த ஜெயசிங்கிற்கும் இடையே மோதல் நீடித்து வந்தது.

இதில் ஜெய்சிங் தரப்புக்கு ஆதரவாக நெல்லை எம்.பி ஞானதிரவியம் செயல்படுவதாக கூறப்படுகிறது.

இதை தொடர்ந்து , தென்னிந்திய திருச்சபையின் யோவான் பள்ளி தாளாளர் பொறுப்பில் இருந்தும், ஆட்சி மன்ற குழு உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் ஞான திரவியம் நீக்கப் பட்டார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பாளையங்கோட்டையில் உள்ள சி.எஸ்.ஐ. திருமண்டல அலுவலகத்தில் சில அறைகளை ஞானதிரவியம் தரப்பினர் பூட்டு போட்டு பூட்டிச் சென்றதாக கூறப்படுகிறது.

இது தொடர்பான மோதலில் பேராயார் காட்பிரே நோபிள் என்பவர் தாக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து, காட்பிரே நோபிள் நெல்லை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்து இருந்ததோடு, ஞானதிரவியம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுகவை வலியுறுத்தி இருந்தார்.

இந்நிலையில், மதபோதகர் தாக்கப்பட்ட விவகாரத்தில் விளக்கம் கேட்டு திமுக தலைமை நோட்டீஸ் அனுப்பிய நிலையில், எம்.பி ஞானதிரவியம் உட்பட 36 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தம் மீதான புகார் குறித்து நேரிலோ அல்லது கடிதத்திலும் விளக்கம் அளிக்க ஞான திரவியம் தவறும் பட்சத்தில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று திமுக தலைமை எச்சரித்துள்ளது.

மக்களின் குறைகளை தீர்க்கும் மக்கள் பிரதிநிதியான நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரே இது போன்று பொது இடத்தில் வைத்து மத போதகர் ஒருவரை தாக்கிய சம்பவம் மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்